KARAIKUDI
  Home
 
 
 



முன்னுரை

 

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களுக்கு வணக்கம் இதுவரை பார்த்து வந்த அல்லது படித்த எண் கணித முறைகளைக் காட்டிலும், தமிழ்முறை எண் கணிதம் உலகில் முதன் முதலில் தோன்றியதும் அடிப்படை ஆதாரங்களுடனும், முதன் முதலில் கணிதத்தின் அடிப்படையில்சித்தர்களால் உருவாக்கப்பட்டதே தமிழ் முறை எண் கணிதம் ஆகும். மேலும் தமிழ் உயிர் எழுத்துக்களின் ஓலிக்கூறுகளின் அடிப்படையில் பண்ணிரண்டு இராசிகளுக்கு தமிழ் உயிர் எழுத்துக்களின் ஒலிக்கூறுகள் அமைக்கப்பட்டுள்ளது.

எண் கணிதம் முற்றிலும் தமிழ் மொழிக் கலையாகும். தமிழகத்தில் தோன்றிய கருவூறார்கள், கலை ஞானத்தாலும் ஆத்ம சத்தியாலும் அரும் பெரும் பலவிதமான கலைகளை தமிழகத்திற்கு தந்தனர். மற்றவர்களின் வருகையாலும், சூழ்ச்சியாலும் அவைகள் முற்றிலும் அழிக்கப்பட்டு விட்டது. தற்போதுதான் தமிழகத்தில் தோன்றிய சித்தர்கள் மற்றும் கருவூறார்களின் கருத்துக்களையும், பெருமைகளையும் பலர் வெளியிட்டு பரப்பி வருகிரார்கள்.

 

தமிழ் மொழியில் உருவான தமிழ் முறை எண் கணிதம் (எ) யோக சாத்திரம், எமது குரு தேவரின் குருவுள திருவுள ஒப்புதலுடனும், அருளாசியுடனும் எமது ஆராய்ச்சியின் மூலமாகவும் உருவாக்கப்பட்டது. எமது அனுபவ முறைப்படி தமிழ் முறை எண் கணிதப் பலன்கள் மற்றவர்களுக்கு மிகச்சரியாகவே உள்ளது. இதனை பலரும் எம்மிடம் ஒத்துக்கொண்டு உள்ளனர். இதன் மூலம் பல வெற்றியாளர்களும் உருவாகியுள்ளனர். ஒரு சிலர் மட்டும் பலன் அடைவதைக் காட்டிலும் தமிழக மக்கள் அனைவரும் தமிழ்முறை எண் கணிதத்தால் முழு பலன்கள் அடைய வேண்டும் என்ற நோக்கத்தில், தமிழ்முறை எண் கணிதத்தை நூல் வடிவில் உருவாக்கி எமது குரு தேவரின் திருவுள ஒப்புதலுடனும் அருளாசியுடனும் வெளியிடப்பட்டுள்ளது.

 

 




 
முற்றிலும் புதிய கோணத்தில் 30 ஆண்டுகளாக ஆராய்ச்சி செய்து முதன் முறையாய் தமிழ் முறைப்படி பெயரியல் யோக சாத்திரம் புத்தகம் வெளியிடப்பட்டுள்ளது
 
This website is best viewed at 1024 x 768 pixels with Internet Explorer in medium text size.                           Powered by : Outbox6
 
 
KARAIKUDI